Skip to content

சொல் பொருள்

(பெ) பரப்பு, அகற்சி,

சொல் பொருள் விளக்கம்

பரப்பு, அகற்சி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

wide extent, expansiveness

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இந்த நனம் என்ற சொல் கலித்தொகையில் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் நனம் தலை
 என்ற தொடராகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

நாள்அங்காடி நனம் தலை கம்பலை – மது 430

நாளங்காடியையுடைய அகன்ற இடத்தில் (எழுந்த)பெரிய ஆரவாரமும்

நனம் தலை வினைஞர் கலம் கொண்டு மறுக – மது 539

வளம் தலைமயங்கிய நனம் தலை மறுகின் – பட் 193

நாடு காண் நனம் தலை மென்மெல அகன்-மின் – மலை 270

சூர் உடை நனம் தலை சுனை நீர் மல்க – நற் 7/1

நனம் தலை கானத்து இனம் தலைப்பிரிந்த – குறு 272/3

அழல் அவிர் நனம் தலை நிழல் இடம் பெறாது – ஐங் 326/1

வளம் பல நிகழ்தரு நனம் தலை நன் நாட்டு – பதி 15/17

இனம் தலைமயங்கிய நனம் தலை பெரும் காட்டு – அகம் 39/12

பாழ் செய்தனை அவர் நனம் தலை நல் எயில் – புறம் 15/3

கல் உயர் நனம் சாரல் கலந்து இயலும் நாட கேள் – கலி 52/6

பாறைகள் உயரே நிற்கும் அகன்ற மலைச்சாரலில் கூடித்திரியும் நாடனே கேட்பாயாக!

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *