சொல் பொருள்
ஈயாக் கருமியை நப்பி என்பது நெல்லை வழக்காகும்
சொல் பொருள் விளக்கம்
ஈயாக் கருமியை நப்பி என்பது நெல்லை வழக்காகும். நக்குதல் = விரும்பிச் சுவைத்தல்; நச்சுதல் = விரும்புதல்; நத்துதல் = விரும்பிக் கிடத்தல் இவற்றைப் போன்ற சொல்லமைப்பு, நப்புதல் ஆகும். தனக்கே எல்லாமும் என்னும் தற்பற்றே அது. ஆதலால் ஈயாக் கருமியாய் எச்சில் கை உதிரானாய் இருப்பானை ‘நப்பி’ என்பது வழக்காயிற்று. பொதுவழக்கு இலக்கிய வழக்கில் இழந்துபோன வளத்தை மீட்டெடுக்க உதவுமெனக் காட்டும் சான்றாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
இலங்கையிலும் நப்பி என்பது பயன்பாட்டில் உள்ளது.
நப்பி, கஞ்சன், ஈயாப் பத்தன் என்பனே ஒரே அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்கள்.