Skip to content

சொல் பொருள்

(பெ) 1. நம்மவர், நம் தலைவர், 2. நம்முடைய உறவினர்,  3. நம்மைச் சார்ந்தவர்,

சொல் பொருள் விளக்கம்

நம்மவர், நம் தலைவர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

our man, our relations, persons of our party

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

குன்று தலைமணந்த கானம்
சென்றனர்-கொல்லோ சே_இழை நமரே – குறு 281/5,6

மலைகள் பொருந்திய காட்டினில்
சென்றுவிட்டாரோ? சிவந்த அணிகலன்கள் அணிந்தவளே! நம்தலைவர்

வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப
நமர் கொடை நேர்ந்தனர் ஆயின் அவருடன்
நேர்வர்-கொல் வாழி தோழி – நற் 393/9-11

நம்மை மணம்பேச வந்த வாய்மையான செயலுக்கேற்ப
நம்மவர்கள் பெண்கொடுக்க இசைந்தால், அவருடன்
இசைவாகப் பேசுவார்களோ? வாழ்க, தோழியே

அதனால் நமர் என கோல் கோடாது
பிறர் எனக்குணம் கொல்லாது – புறம் 55/13,14

அதனால், இவர் நம்மைச் சார்ந்தவர் செங்கோல் வளையாது,
இவர் நமக்குப் அயலோர் என்று அவர் நற்குணங்களைக் கெடாது

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *