Skip to content

சொல் பொருள்

(வி) 1. விருப்பம்கொள்,  2. இனிமை தோன்று, 

சொல் பொருள் விளக்கம்

விருப்பம்கொள்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

have a desire, be sweet

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தன் மலை பாட நயவந்து கேட்டு அருளி
மெய்ம் மலி உவகையன் புகுதந்தான் – கலி 40/31,32

அவனுடைய மலையை நாம் பாட, அதனை விரும்பிக்கேட்டருளி,
 உடல் பூரித்த உவகையனாய் வந்துவிட்டான்

செம் கண் இரும் குயில் நயவர கூஉம் – அகம் 229/19

சிவந்த கண்ணினையுடைய கரிய குயில் இனிமை தோன்றக் கூவும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *