சொல் பொருள்
நறுவுதல் என்பது விரும்புதல் என்னும் பொருளில் மதுக்கூர் வட்டார வழக்காக உள்ளது
சொல் பொருள் விளக்கம்
நறுவுதல் என்பது விரும்புதல் என்னும் பொருளில் மதுக்கூர் வட்டார வழக்காக உள்ளது. “வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்” என்னும் ஒளவையார் தனிப்பாடல் நறுவிது என்பதை ஆள்கிறது. நல்ல மணமும் சுவையும் உடையது நறுவிது ஆகும். குறைவாகவும் சுவையானதாகத் தேர்ந்தும் உண்பவரை “நறுவிசாகச் சாப்பிடுவார்” என்பது நெல்லை வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்