சொல் பொருள்
(பெ) பார்க்க – நலம் 1. உயர்வு, 2. நல்ல நிலை, 3. அழகு, 4. நன்மை,
சொல் பொருள் விளக்கம்
பார்க்க – நலம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
excellence, well-being, beauty, good
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிண சுறா அறுத்த உணக்கல் வேண்டி இன புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ புலவு நாறுதும் செல நின்றீமோ – நற் 45/6-8 கொழுப்புள்ள சுறாமீனை அறுத்த துண்டங்களைக் காயவைப்பதற்காக, கூட்டமாக வரும் பறவைகளை விரட்டும் எமக்கு உயர்ந்த நலன்கள் என்ன வேண்டியுள்ளது? எம்மிடம் புலால் நாறுகிறது. தள்ளி நில்லுங்கள், தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி – நற் 56/8 முன்பிருந்த என்னுடைய நல்ல நிலையை இழந்துபோன எனது பசலை பாய்ந்த பொன் நிறத்தைப் பார்த்து வடி நலன் இழந்த என் கண்ணும் நோக்கி பெரிது புலம்பினனே சீறியாழ் பாணன் – ஐங் 475/2,3 மாவடு போன்ற தம் அழகை இழந்த என் கண்களையும் நோக்கி, பெரிதும் வருந்தினான் சீறியாழ்ப் பாணன் நல்லதன் நலனும் தீயதன் தீமையும் – புறம் 29/11 நல்வினையினது நன்மையும், தீவினையினது தீமையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்