சொல் பொருள்
(வி) 1. தாழ்வடை, நிலைகுலை, 2. வருந்து, 3. வருத்து,
சொல் பொருள் விளக்கம்
தாழ்வடை, நிலைகுலை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
deteriorate, worsen, suffer, be in distress, afflict, distress
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கார் அதிர் காலை யாம் ஓ இன்று நலிய நொந்து_நொந்து உயவும் உள்ளமொடு வந்தனெம் மடந்தை நின் ஏர் தர விரைந்தே – ஐங் 491/1-3 கார்கால மேகங்கள் முழங்குகின்ற பொழுதில், நான் இடையறவின்றி நலிந்துகொண்டிருக்க, நொந்து நொந்து வருந்தும் உள்ளத்தோடு, வந்துவிட்டேன் மடந்தையே! உன் அழகு என்னை இழுத்துவர, விரைவாக. காதலர் பிரிந்தோர் கையற நலியும் தண் பனி வடந்தை அச்சிரம் – ஐங் 223/3,4 காதலரைப் பிரிந்தவர்கள் செயலற்று வாடிவருந்தும் குளிர்ந்த பனியோடே சேர்ந்த வாடையுடன் கூடிய முன்பனிக்காலத்தை மெய் கொள் பெரும் பனி நலிய பலர் உடன் கை கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க – நெடு 7,8 (தம்)உடம்பில் கொண்ட மிகுந்த குளிர்ச்சி வருத்துகையினால், பலரும் கூடிக் கையில் பிடித்த கொள்ளிக்கட்டையராய், கன்னங்களின் உட்புறம்(பற்கள்) அடித்துக்கொண்டு நடுங்க
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்