Skip to content

சொல் பொருள்

(வி) 1. கொடு, 2. அன்பு செலுத்து, 3. அருள் செய், இரக்கம் காட்டு,

சொல் பொருள் விளக்கம்

கொடு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

bestow, grant, show love, show grace

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கான மஞ்ஞைக்கு கலிங்கம் நல்கிய
அரும் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் – சிறு 85,86

காட்டு மயிலுக்குத் தன் போர்வையைத் தந்த
அரிய வலிமையுடைய வடிவமுள்ள ஆவியர் குடியிற் பிறந்த பெருமகன்

நல்குவன் போல கூறி
நல்கான் ஆயினும் தொல் கேளன்னே – ஐங் 167/3,4

முன்னர் விரும்பி அன்புசெய்பவன் போல இனிய மொழிகளைக் கூறி,
இப்போது அன்புசெய்யானாயினும் நெடுங்காலம் நம்மீது நட்புக்கொண்டவனல்லவோ?

பொறுக்கல்லா நோய் செய்தாய் பொறீஇ நிறுக்கல்லேன்
நீ நல்கின் உண்டு என் உயிர் – கலி 94/11,12

பொறுக்க முடியாத காம நோயை ஏற்படுத்தினாய்! நான் பொறுத்திருக்கமாட்டேன்,
நீ இரக்கப்பட்டால் என் உயிர் என்னிடத்தில் உண்டு”

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *