Skip to content

சொல் பொருள்

(வி) அடர்ந்திரு, நெருங்கியிரு,

2. (பெ) 1. அடர்த்தி, செறிவு, 2. உயர்வு, பரப்பு, 3. அகலம்,

சொல் பொருள் விளக்கம்

அடர்ந்திரு, நெருங்கியிரு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be close together, crowded, closeness, denseness, greatness, vastness, width, breadth, extent

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நளிந்து பலர் வழங்கா செப்பம் துணியின் – மலை 197

கூட்டமாகப் பலர் புழங்காத நேரான பாதைகளில் போகத் துணிந்தால்

நன் மரன் நளிய நறும் தண் சாரல் – புறம் 150/15

நல்ல மரச் செறிவையுடைய நறிய குளிர்ந்த மலைச்சரலின்கண்

நள்ளென் கங்குல் நளி மனை நெடு நகர் – ஐங் 324/3

நள்ளென்னும் நடுயாமத்து இரவில், பரந்த மனையில் உள்ள நீண்ட இல்லத்தில்

நளி கடல் முகந்து செறி_தக இருளி – நற் 289/4

படர்ந்த கடல்நீரை முகந்துகொண்டு செறிவுற்று இருண்டு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *