சொல் பொருள்
(பெ) ஒரு மலை,
சொல் பொருள் விளக்கம்
ஒரு மலை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a mountain
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இன்றைய வேலூர் திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி முற்காலத்தில் ‘பல்குன்றக் கோட்டம்’ என்று வழங்கப்பட்டது. பல்குன்றக் கோட்டத்தைச் சிறப்புடன் ஆட்சி செய்தவன் செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னன் என்னும் அரசன். இவனது நாட்டிலுள்ள ஒரு மலையே நவிர மலை. இதனை, இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் என்ற புலவர் ‘மலைபடுகடாம்’ என்ற இலக்கியத்துள் காட்டியிருக்கின்றார். பேர் இசை நவிரம் மேஎய் உறையும் காரி உண்டி கடவுளது இயற்கையும் – மலை 82,83 பெரும் புகழ்கொண்ட நவிரம் என்னும் மலையில் நிலைகொண்டு வாழுகின்ற, நஞ்சை உணவாகக் கொண்ட இறைவனது இயல்பையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்