சொல் பொருள்
(பெ) ஒரு வகை முருங்கை மரம்,
சொல் பொருள் விளக்கம்
ஒரு வகை முருங்கை மரம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a type of murungai tree
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நார் இல் முருங்கை நவிரல் வான் பூ சூரல் அம் கடு வளி எடுப்ப ஆர் உற்று உடை திரை பிதிர்வின் பொங்கி முன் கடல் போல் தோன்றல – அகம் 1/16-19 நாரற்ற முருங்கையான நவிரலின் வெண்மையான பூக்கள் சுழற்றி அடிக்கும் கடுமையான காற்று மேலெழும்ப, சிதறலுண்டு, உடைந்த அலைகளின் சிதறலைப் போன்று நுரைத்தெழ, முன்பகுதிக் கடல் போன்று தோன்றும் நார் இல் முருங்கை நவிரல் வான்பூ என்பதற்கு, ’நார் இல்லாத முருங்கையின் குலைந்த வெள்ளிய பூக்கள்’ என்று பொருள் கொள்வார் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்