சொல் பொருள்
(வி) கூறு, சொல்,
சொல் பொருள் விளக்கம்
கூறு, சொல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
say, tell
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பாழ் என கால் என பாகு என ஒன்று என இரண்டு என மூன்று என நான்கு என ஐந்து என ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என நால் வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை – பரி 3/77-80 பாழ் என்ற புருடதத்துவமும், கால் என்ற ஐந்து பூதங்களும், பாகு என்ற தொழிற்கருவிகள் ஐந்தும், ஒன்றாவதான ஓசையும், இரண்டாவதான தொடுவுணர்ச்சியாகிய ஊறும், மூன்றாவதான ஒளியும், நான்காவதான சுவையும், ஐந்தாவதான நாற்றமும், ஆறாவதான மனத்தைச் சேர்த்த அறிகருவிகள் ஆறும், ஏழாவதான ஆணவமும், எட்டாவதான புத்தியும், ஒன்பதாவதான மூலப்பகுதியும், நால்வகை ஊழியின்போதும், இந்த எண்கள் கூறும் பெருமையினையுடையவனே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்