சொல் பொருள்
1. (வி) கொல்
2. (பெ) 1. குற்றம், 2. தண்டனை,
சொல் பொருள் விளக்கம்
கொல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
kill, slay, fault, blemish, punishment
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாய்மொழி தந்தையை கண் களைந்து அருளாது ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின் – அகம் 262/5,6 வாய்மை மிக்க தந்தையை அருளாமல் கண்ணைப் பிடுங்கி பழமை வாய்ந்த ஊரிலுள்ள கோசர்கள் கொன்ற கொடுமைபற்றி கடு நவை ஆர் ஆற்று அறு சுனை முற்றி உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை – கலி 12/3,4 கொடுங் குற்றங்கள் நடைபெறும் கடத்தற்கரிய காட்டுவழியில், நீர் வற்றிப்போன சுனையைச் சுற்றிநின்று, ஒருசேர நீர்வேட்கை கொண்டதால், உடல் வருந்திய யானைகள் பெரும் சீர் அன்னி குறுக்கை பறந்தலை திதியன் தொல் நுலை முழுமுதல் துமியப்பண்ணிய நன்னர் மெல் இணர் புன்னை போல கடு நவை படீஇயர் மாதோ – அகம் 145/10-14 பெரிய புகழையுடைய அன்னியானவன், குறுக்கைப் பறந்தலை என்னும் போர்க்களத்தில் திதியன் என்பானது பழைமை பொருந்திய பரிய அடியுடன் துணித்திட்ட நன்றாகிய மெல்லிய பூங்கொத்துக்களையுடைய புன்னையைப் போல பெரிய தண்டனையை அடைவனவாக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்