சொல் பொருள்
நாக்கோணல் – சொல் மாறல்
சொல் பொருள் விளக்கம்
நாவு கோணல் என்பது சொன்ன சொல்லை மாற்றிப் பேசுதல், மறுத்து அல்லது மறைத்துப் பேசுதல் என்பவற்றைக் குறிப்பதாக அமைகின்றது. “கோடானு கோடி, கொடுப்பினும் தன்னுடைநாக்கோணாமை கோடியுறும்” என்னும் ஒளவையார் தனிப்பாடல் நாக்கோணாமை என்ன என்பதையும் அதனைப் போற்றுதலின் அருமையையும் தெளிவிக்கும். நாக்கு மாறி, சொற்புரட்டன், பேச்சுமாறி என்பனவெல்லாம் நாக்கோணல் பற்றினவே, “சொன்னதை மாற்றிப் பேசுதல் வாந்தியெடுத்ததை உண்டல்” என உவமை வகையில் வசை மொழியாக வழங்குகின்றது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்