சொல் பொருள்
நாடகமாடல் – இல்லாததும் பொல்லாததும் சொல்லி ஏமாற்றல்
சொல் பொருள் விளக்கம்
நாடகம் உயர்ந்த கலை; எனினும் அதன் உள்ளீடு பெரிதும் புனைவும் கற்பனையுமே. அதனால் ‘நாடகக்காட்சி’ நிகழ்கின்ற முறையிலேயே ஒன்று நிகழ்ந்ததாக எவரும் கொள்ளார். அது நடிப்புத்திறம் காட்ட வல்லகலை; அது கலையே அன்றி வாழ்வன்று நாடகமே வாழ்வாகி விட்டால், வாழ்வு என்னாகும்? “இவ்வளவு தெரிந்தும் என்னிடமே நாடகமாடுகின்றான்” என்றும், “என்ன நடிப்பு நடிக்கின்றான்” என்றும் உவர்ப்பால் சொல்லுவது உண்டு. ‘பசப்புதல்’ என்பதும் ஒருவகையில் நாடகமாடுதல் போன்றதே.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்