சொல் பொருள்
(பெ) நாடுதல், விரும்பிவருதல்,
நாடல் – நெருங்குதல்
சொல் பொருள் விளக்கம்
நாடல், விரும்புதல் பொருளது. அவ்விருப்பம் நெருக்கத்தை உண்டாக்குதல் கண்கூடு. விருப்பம் உடையவர்களை அடிக்கடி பார்த்தலும், அவர்கள் இருக்குமிடம் செல்லலும், அவர்கள் விரும்புவன செய்தலும் எல்லாம் நெருக்கத்தின் மேல் நெருக்கமாக அமைவன. “ஆரிருந்தால் என்ன அவனுக்கு அவள் மேல்தான் நாட்டம்; பாரேன் குழைவதை! என்பதில் நாட்டம் விருப்பத்தின் வழியாக வந்த நெருக்கத்தைக் காட்டுவதாம். ‘என்னை நாடினான்’ என்பதில் நெருங்கினான்’ என்பதே பொருளாதல் அறிக.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
seeking with a desire
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின் – நற் 327/1 நம்மை விரும்பி வந்த சான்றோரான நம் தலைவரை நம்புதல் பழியைத் தருமென்றால் நாடல் சான்ற நயன் உடை நெஞ்சின் – பதி 86/7 அறத்தின் மீதான நாட்டம் மிகுந்த அன்புடைய நெஞ்சினையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்