சொல் பொருள்
(பெ) 1. சோதிடம், 2. கண், பார்வை, 3. ஆராய்ச்சி, 4. நாடுதல், விருப்பம்.நோக்கம்,
சொல் பொருள் விளக்கம்
சோதிடம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
astrology, eye, sight, examination, investigation, desire, intension, aim
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்று ஐந்து உடன் போற்றி அவை துணை ஆக எவ்வம் சூழாது விளங்கிய கொள்கை – பதி 21/1-3 சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், சோதிடம், வேதம், ஆகமம் ஆகிய ஐந்தினையும் சேர்ந்து கற்று, அவையே துணையாக, எவ்வுயிருக்கும் துன்பம் சூழாமல் விளங்கும் கொள்கையுடன், நுதலது இமையா நாட்டம் – அகம் 0/4 நெற்றியில் உள்ளது இமைக்காத கண் அறம் புரிந்து அன்ன செங்கோல் நாட்டத்து முறை வேண்டு பொழுதின் – புறம் 35/14,15 அறக்கடவுள் மேவி ஆராய்ந்தாற்போன்ற செங்கோலால் ஆராயும் ஆராய்ச்சியையுடைய நீதியைக் கேட்கவேண்டும்காலத்து புனிற்று புலால் நெடு வேல் எழு பொறி நாட்டத்து எழாஅ தாயம் வழு இன்று எய்தியும் அமையாய் – புறம் 99/6-8 நாள்தோறும் புதிய ஈரம் புலராத புலாலையுடைய நெடிய வேலையுமுடைய ஏழிலாஞ்சனையும், நாடுதலையுடைய ஒருநாளும் நீங்காத அரசவுரிமையை தப்பின்றாகப் பெற்றும் அமையாய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்