சொல் பொருள்
(பெ) 1. தன்மை,பன்மைச் சொல், 2. அச்சம்,
சொல் பொருள் விளக்கம்
தன்மை,பன்மைச் சொல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
we, fear, dread
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இருவேம் ஆய்ந்த மன்றல் இது என நாம் அறிவுறாலின் பழியும் உண்டோ – குறி 21,22 தலைவனும் யானுமே ஆய்ந்துசெய்த மணம் இது என்று நானும்,நீயும் (என் தாய்க்கு)அறிவுறுத்தலால் நமக்குப் பழியுமுண்டோ?(இல்லை) தண் நறும் தொடையல் வெண் போழ் கண்ணி நலம் பெறு சென்னி நாம் உற மிலைச்சி – குறி 115,116 தண்ணிய நறிய மலர்ச்சரங்களையும், வெண்மையான தாழைமடல் தலைமாலையினையும், அழகு பெற்ற தலையில், (முருகனோ என்று)அச்சமுறும்படி சூடி,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்