சொல் பொருள்
(பெ) 1. மணம், வாசனை, 2. நறுமணம், 3. ஒவ்வாத மணம்,
சொல் பொருள் விளக்கம்
மணம், வாசனை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
smell, scent, odour, fragrance, offensive smell
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அணங்கு வீழ்வு அன்ன பூ தொடி மகளிர் மணம் கமழ் நாற்றம் தெரு_உடன் கமழ – மது 446,447 தெய்வமகளிர் கீழிறங்கிவந்ததைப் போல, பூத்தொழில் செய்த வளையலினையுடைய மகளிரின், மணம் கமழ்கின்ற வாசனை தெருவெங்கும் வீச, கொள்ளி வைத்த கொழு நிண நாற்றம் மறுகு உடன் கமழும் மதுகை மன்றத்து – புறம் 325/9,10 நெருப்பில்வேகவைத்த கொழுவிய நிணத்தின் மணம் தெருவெல்லாம் மணக்கும் வலிய மன்றத்தில் வான் ஆற்றும் மழை தலைஇ மரன் ஆற்றும் மலர் நாற்றம் தேன் ஆற்றும் மலர் நாற்றம் செறு வெயில் உறு கால கான் ஆற்றும் கார் நாற்றம் கொம்பு உதிர்த்த கனி நாற்றம் தான் நாற்றம் கலந்து உடன் தழீஇ வந்து தரூஉம் வையை – பரி 20/8-11 மேகங்கள் வழங்கும் மழை தொடர்ந்து பெய்து, மரங்கள் தரும் மலர்களின் நறுமணமும், தேனைத் தரும் மலர்களின் நறுமணமும், சுடும் வெயிலால் காய்ந்து, மேலெழும் காற்றை உடைய கானங்கள் எழுப்பும் புதுமழையின் மணமும், மரக்கிளைகள் உதிர்த்த கனிகளின் நறுமணமும், தான் இவ்வாறான மணங்களைக் ஒருசேரக் கலந்து கொணர்ந்து வந்து தருகின்றது வையை; செழும் கோள் வாங்கிய மா சினை கொக்கு_இனம் மீன் குடை நாற்றம் தாங்கல் செல்லாது துய் தலை மந்தி தும்மும் – நற் 326/2-4 செழுமையான குலைகளால் வளைந்த கரிய கிளையில், கொக்குகள் மீனைக் குடைந்து உண்பதால் ஏற்படும் புலவுநாற்றத்தைத் தாங்க மாட்டாத மெல்லிய பஞ்சுபோன்ற தலையையுடைய மந்தி தும்மும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்