சொல் பொருள்
(பெ) பார்க்க : நாகன்
சொல் பொருள் விளக்கம்
பார்க்க : நாகன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நாலை கிழவன் நாகன் ஞால மீமிசை வள்ளியோர் மாய்ந்தென ஏலாது கவிழ்ந்தவென் னிரவன் மண்டை மலர்ப்போர் யாரென வினவலின் மலைந்தோர் விசிபிணி முரசமொடு மண்பல தந்த திருவீழ் நுண்பூட் பாண்டியன் மறவன் படைவேண்டுவழி வாளுதவியும் வினைவேண்டுவழி யறிவுதவியும் வேண்டுப வேண்டுப வேந்தன் றேஎத் தசைநுகம் படாஅ வாண்டகை யுள்ளத்துத் தோலா நல்லிசை நாலை கிழவன் பருந்துபசி தீர்க்கு நற்போர்த் திருந்துவே னாகற் கூறினர் பலரே - புறநா. உலகத்தின்மேல் வண்மையுடையோர்இறந்தாராகப் பிறர்பால் ஏலாது கவிழ்ந்த எனதுஇரத்தலையுடைய மண்டையை ஏற்கும் பரிசு இட்டு மலர்த்தவல்லார்யாரென்று கேட்டலின், தன்னொடு மாறுபட்டோரது வலித்துப்பிணிக்கப்பட்ட முரசத்தோடு மண் பலவற்றையும் கொண்டதிருமகள் விரும்பிய நுண்ணிய தொழில் பொருந்திய ஆபரணத்தையுடைய பாண்டியன் மறவன், அவனுக்குப் படைவேண்டியவிடத்துவாட்போரை யுதவியும் அரசியற்கேற்ற கருமச்சூழ்ச்சி வேண்டியவிடத்து அமைச்சியலோடு நின்று அறிவு உதவியும் இவ்வாறு வேண்டுவன அவ்வரசனிடத்து உதவித் தான் பூண்ட நுகம் ஒருபாற்கோடித் தளராமற் செலுத்தும் பகடுபோல ஆண்மையினும் சூழ்ச்சியினுந் தளராத ஆண்மைக்கூறுபாடு பொருந்திய ஊக்கத்தினையும் தோலாத நல்ல புகழையுமுடைய நாலைகிழவன்,பருந்தினது பசிதீர்க்கும் நல்ல போரைச் செய்யும்திருந்திய வேலையுடைய நாகனைப் பலரும் சொன்னார் http://www.tamilvu.org/ta/library-l1280-html-l12803a3-126975
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்