Skip to content

சொல் பொருள்

(பெ) 1. ஒரு முகத்தல் அளவைக் கருவி, 8 உழக்கு, 2. ஆவநாழிகை, அம்பறாத்தூணி 3. நாழிகை,

சொல் பொருள் விளக்கம்

ஒரு முகத்தல் அளவைக் கருவி, 8 உழக்கு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a measure of capacity = eight uzhakku

indian hour = 24 minutes

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நாழி கொண்ட நறு வீ முல்லை – முல் 9

பெரிய உழக்கில் கொண்டுபோன நறிய பூக்களையுடைய முல்லை

ஆழாக்கு, உழக்கு, நாழி, படி, குறுணி, பதக்கு, மரக்கால், கலம் போன்றவை பல்வேறு
முகத்தல் அளவுகள்.இவற்றுக்கிடையே உள்ள வாய்பாடு இடங்கள்தோறும் மாறுபடும்.
மாதிரிக்கு ஒன்று.

5 செவிடு – 1 ஆழாக்கு

2 ஆழாக்கு – 1 உழக்கு

2 உழக்கு – 1 உரி

2 உரி – 1 படி

8 படி – 1 மரக்கால் (குறுணி)

12 மரக்கால் – 1 கலம்

2 குறுணி – 1 பதக்கு

2 பதக்கு – 1 தூணி

ஆர் ததும்பும் அயில் அம்பு நிறை நாழி
சூர் ததும்பு வரைய காவால் – பரி 18/30,31

அழகு ததும்பும் கூர்மையான அம்புகள் நிறைந்த அம்பறாத்தூணி யாக இருக்கிறது
தெய்வமகளிர் நிறைந்த மலையிலிருக்கும் சோலை

அன்னையோ காண் தகை இல்லா குறள் நாழி போழ்தினான்
ஆண்டலைக்கு ஈன்ற பறழ்_மகனே – கலி 94/5,6

“அம்மாடியோ? காணச் சகிக்காத குள்ளனாய்ப் பிறப்பதற்குரிய நாழிகையான நல்லநேரத்தில்
ஆந்தைக்குப் பிறந்த நாய்க்குட்டியே!

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *