சொல் பொருள்
நாவசைத்தல் – ஆணையிடல்
சொல் பொருள் விளக்கம்
நாவு அசைத்தல் என்பது ஒலித்தல், பேசல், ஆட்டல் என்னும் பொருள்களின் நீங்கி ஆணையிடுதல் என்னும் பொருளிலும் வழங்குகின்றது. “அவன் நாவசைத்தால் போதும்; நாடே அசையும்” என்பது நாவசைத்தல் – ஆணை என்னும் பொருளாதலை விளக்கும். “நீங்கள் நாவை அசைத்தால் போதும்; நான் முடித்துவிடுவேன்” என்பது ஆணை கேட்டு உட்படுவார் வேண்டுகை உரை.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்