சொல் பொருள்
(பெ) நித்தமும், எப்பொழுதும்,
சொல் பொருள் விளக்கம்
நித்தமும், எப்பொழுதும்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
daily, always
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அச்சத்தான் மாறி அசைவினான் போத்தந்து நிச்சம் தடுமாறும் மெல் இயல் ஆய்_மகள் மத்தம் பிணித்த கயிறு போல் நின் நலம் சுற்றி சுழலும் என் நெஞ்சு – கலி 110/8-11 உன் மீதுள்ள அச்சத்தால் உன்னை விட்டு என்னிடம் வந்து, இங்கும் இருக்கமாட்டாத வருத்தத்தால் உன்னிடம் சென்று, இவ்வாறாக நித்தமும் தடுமாறுகின்றது, மென்மையான இயல்பினையுடைய ஆயர்மகளே! தயிர் கடையும் மத்தில் கட்டிய கயிற்றினைப்போல் உன் அழகைச் சுற்றிச் சுற்றிச் சுழலும் என் நெஞ்சு;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்