சொல் பொருள்
(பெ) 1. கடைத்தெரு, 2. ஓர் ஊரின் பெயர்,
சொல் பொருள் விளக்கம்
கடைத்தெரு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bazaar street, the name of a city
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து மாடம் மலி மறுகின் கூடல் குட வயின் – திரு 70,71 கண்களைத் தாக்கிக் கூசவைக்கும் மின்னல்கொடியைப் போன்று ஒளிரும் பொன்னாலான மின்னுகின்ற (காலில் அணியும்)நகைகள் ஒலிக்க (வெளியே)வந்து திருமகள் வீற்றிருந்த குற்றம் தீர்ந்த அங்காடித் தெருவினையும், மாடங்கள் மிகுந்திருக்கும் (ஏனைத்)தெருக்களையும் உடைய மதுரையின் மேற்றிசையில் கரும் கண் கோசர் நியமம் ஆயினும் உறும் எனக் கொள்ளுநர் இல்லை – அகம் 90/12,13 கரிய கண்களையுடைய கோசர்கள் வாழும் நியமம் என்னும் ஊரினைக் கொடுப்பினும் அமையும் எனக் கொள்வார் அல்லர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்