சொல் பொருள்
(பெ) முழுமை, பூரணம்
சொல் பொருள் விளக்கம்
முழுமை, பூரணம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fullness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: போ சீத்தை மக்கள் முரியே நீ மாறு இனி தொக்க மர கோட்டம் சேர்ந்து எழுந்த பூ கொடி போல நிரப்பம் இல் யாக்கை தழீஇயினர் எம்மை புரப்பேம் என்பாரும் பலரால் – கலி 94/22-25 “போ! சீச்சீ! அரை மனிதனே! இனி நீ இந்நிலையைக் கைவிடு! திரண்ட மரத்தின் வளைவான இடத்தைப் பற்றி எழுந்த பூங்கொடியைப் போல முழு வளர்ச்சி இல்லாத தம் வடிவால் என்னைத் தழுவி, என்னைக் காப்பாற்றுவோம் என்று கூறுபவர் பலர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்