சொல் பொருள்
(வி) 1. ஓர் இடத்தில் இட்டு நிறைவாக்கு, 2. இல்லை என்று கூறு, இன்மையைக் கூறு,
(பெ) வறுமை
சொல் பொருள் விளக்கம்
ஓர் இடத்தில் இட்டு நிறைவாக்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fill up, replenish, say ‘No’, express poverty, poverty, destitution
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெண் தோடு நிரைஇய வேந்து உடை அரும் சமம் கொன்று புறம்பெற்று மன்பதை நிரப்பி வென்றி ஆடிய தொடி தோள் – பதி 40/10-12 வெண்மையான பனந்தோட்டினை வரிசையாகத் தொடுத்து அணிந்தவராய் வரும் வேந்தர்களையுடைய அரிய போரினை அழித்து, அவரைப் புறமிடச் செய்து, அவ்விடங்களில் மக்களைக் குடியேறச் செய்த (மக்களால் நிரப்பிய), வெற்றிக் குரவை ஆடிய தொடி விளங்கும் தோள்களையும், நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே – புறம் 180/1 ’இலன்’ என்னும் எவ்வம் உரையாவாறு கொடுக்கும் செல்வமும் உடையான் அல்லன் இரப்ப சிந்தியேன் நிரப்பு அடு புணையின் – புறம் 376/18 பிறர்பால் சென்று இரத்தலை நினையேனாயினேன், வறுமையாகிய கடலைக் கடக்கும் தெப்பமாக அவன் இருத்தலால்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்