சொல் பொருள்
(பெ) 1. ஒரு பாண்டிய மன்னன், 2. ஒரு சேர மன்னன்
சொல் பொருள் விளக்கம்
ஒரு பாண்டிய மன்னன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a Pandiya king
a chera king
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொல் ஆணை நல் ஆசிரியர் புணர் கூட்டுண்ட புகழ் சால் சிறப்பின் நிலம்தருதிருவின்நெடியோன் போல – மது 761-763 தொன்மையான மரபுகளையுடைய நல்ல ஆசிரியர்கள் சேரும் சேர்க்கையை நுகர்ந்த புகழ் நிறைந்த சிறப்பினையுடைய நிலந்தரு திருவில் பாண்டியன் என்னும் உயர்ந்தோனைப் போன்று ’செந்தமிழ் வழங்கும் காலமெல்லாம் தன் புகழ் நிறைந்து விளங்குவதற்குக் காரணமான தமிழ்ச்சங்கம் நிறீஇ அதன்கண் மெய்ந்நூல் புலப்படுத்த சிறப்பினையுடைய மாகீர்த்தியாகிய’ என்று இவனைச் சிறப்பித்துக் கூறுவார் பெருமழைப்புலவர். இந்த நிலந்தரு திருவில் பாண்டியன் அவைக்களத்தில் தொல்காப்பியம் அரங்கேறியது என்பார் அந்நூலுக்குப் பாயிரம் எழுதிய பனம்பாரனார். ’எல்லா நிலங்களையும் தன்னிடத்தே கட்டின பெருஞ்செல்வத்தையுடைய மாயோனைப் போல’ என்று பொருள்கொள்வார் நச்சினார்க்கினியர். வண்மையும் செம்மையும் சால்பும் மறனும் புகன்று புகழ்ந்து அசையா நல் இசை நிலம்தருதிருவின்நெடியோய் – பதி 82/14-16 உனது கொடை, செங்கோன்மை, நற்பண்புகள், வீரம் ஆகிய இவற்றை விரும்பிப் புகழ்வதால் கிடைக்கும் குன்றாத நல்ல புகழையும் மாற்றார் நிலத்தைப் போரிட்டுச் சேர்த்துக்கொள்ளும் செல்வத்தையும் உடைய நெடியவனான சேரமானே இந்தச் சேர மன்னன் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை எனப்படுவான். இவனை பதிற்றுப்பத்தில் ஒன்பதாம் பத்தில் புலவர் பெருங்குன்றூர்க்கிழார் பாடியுள்ளார்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்