சொல் பொருள்
(பெ) 1. மிகுதல், 2. நீட்டித்தல்
சொல் பொருள் விளக்கம்
மிகுதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
increase, extending
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோடை நீடலின் வாடு புலத்து உக்க சிறு புல் உணவு நெறிபட மறுகி நுண் பல் எறும்பு கொண்டு அளைச் செறித்த வித்தா வல்சி – அகம் 377/1-4 கோடையின் வெம்மை மிக்கமையால், வறண்ட நிலத்தே உதிர்ந்த சிறிய புல்லரிசியை ஒழுங்குபட சென்று சிறிய பலவாய எறும்புகள் கொண்டுவந்து தம் வளையில் தொகுத்து வைத்த விதைத்து விளைவிக்காத உணவினை செரு செய் முன்பின் குருசில் முன்னிய பரிசில் மறப்ப நீடலும் உரியிர் – மலை 186,187 போர் செய்யும் மிக்க வலிமையையுடைய மன்னனைக் கருதிச்செல்லும் பரிசிலை(யும்) மறக்குமளவுக்கு (உமது இருப்பை)நீட்டித்தலுக்கு உரித்தாவீர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்