சொல் பொருள்
(பெ) 1. தண்ணீர், 2. கடல், 3. அருவிநீர், 4. கண்ணீர், 5. தன்மை, இயல்பு, 6. இரத்தினத்தின் ஒளி
சொல் பொருள் விளக்கம்
தண்ணீர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
water, sea, water of the falls, tears, nature, water in a gem
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நறு நீர் பொய்கை அடைகரை நிவந்த துறு நீர் கடம்பின் துணை ஆர் கோதை – சிறு 68,69 நறிய நீரையுடைய பொய்கையின் (இட்டு)அடைத்த கரையில் நின்று வளர்ந்த செறிந்த நீர்மையையுடைய கடம்பின் இணைதல் நிறைந்த மாலை, நீர் ஒலித்து அன்ன நிலவு வேல் தானையொடு – மது 369 கடல் ஒலித்ததைப் போன்ற நிலைபெற்ற வேல் படையோடே தலை நாள் விடுவிக்கும் பரிசில் மலை நீர் வென்று எழு கொடியின் தோன்றும் குன்று சூழ் இருக்கை நாடு கிழவோனே – மலை 580-582 (போவோம் என்ற)முதல்நாளிலேயே(தாமதிக்காமல்)வழியனுப்புவான் (தன்)பரிசிலோடே – மலையின் (அருவி)நீர் வென்று உயரும் கொடியைப்போலத் தோன்றும் மலைகள் சூழ்ந்த குடியிருப்புகளைக்கொண்ட நாட்டிற்கு உரிமையுடையவன். நீர் தொடங்கினவால் நெடும் கண் – ஐங் 453/4 கண்ணீர் வரத் தொடங்கிவிட்டது என் நெடும் கண்ணில் நறு நீர் பொய்கை அடைகரை நிவந்த – சிறு 68 துறு நீர் கடம்பின் துணை ஆர் கோதை – சிறு 69 நறிய நீரையுடைய பொய்கையின் (இட்டு)அடைத்த கரையில் நின்று வளர்ந்த செறிந்த நீர்மையையுடைய கடம்பின் இணைதல் நிறைந்த மாலை, நெடு நீர் வார் குழை களைந்தென – நெடு 139 மிகுதியாக ஒளி சிந்தும் காதணி(குண்டலங்)களை நீக்கிட
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்