சொல் பொருள்
(பெ) 1. தன்மை, இயல்பு, 2. இன்சொல், 3. இனிய குணம், 4. நிலைமை,
சொல் பொருள் விளக்கம்
தன்மை, இயல்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
nature, inherent quality, affability, goodness, state, condition
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கண் நோக்கு ஒழிக்கும் கவின் பெறு பெண் நீர்மை மயில் எருத்து வண்ணத்து மாயோய் – கலி 108/37,38 கண்களைக் கூசவைக்கும் பேரழகு பெற்ற பெண்ணியல்பையும், மயில் கழுத்தின் நிறத்தையுமுடைய மாநிறத்தவளே நீர் உரைசெய் நீர்மை இல் சூள் என்றி நேர்_இழாய் – பரி 8/73 நீர் சொல்வது இன்சொல் இல்லாத சூள்’ என்கிறாய்! நேரிய இழைகளை அணிந்தவளே! கடும் தேர் இளையரொடு நீக்கி நின்ற நெடுந்தகை நீர்மையை – அகம் 310/1,2 விரைந்து செல்லும் தேரினை ஏவலாளருடன் சேய்மைக்கண் நிறுத்தி இங்கு வந்து நிற்கும் பெருந்தன்மையாகிய இனிய குணத்தினை உடையவன் ஆகின்றாய் விழவின் கோடியர் நீர்மை போல முறை_முறை ஆடுநர் கழியும் இவ் உலகத்துக் கூடிய நகைப்புறனாக நின் கொற்றம் – புறம் 29/22-25 விழவின்கண் ஆடும் கூத்தரது கோலத்தைப் போல, அடைவடைவே தோன்றி இயங்கி இறந்துபோகின்ற இவ்வுலகத்தின்கண் பொருந்திய மகிழ்ச்சியிடத்ததாக நின்னுடைய கிளை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்