சொல் பொருள்
நீர்வார்த்தல் – தருவதை உறுதிசெய்தல்
சொல் பொருள் விளக்கம்
தாரைவார்த்தல் என்பதும் இதுவே. “இப்பொருள் உன்னதே; எனக்கும் இதற்கும் உள்ள உரிமையை அல்லது தொடர்பை விலக்கிக் கொள்கிறேன்” என்பதற்கு அடையாளமாக நீர் வார்த்தல் அல்லது தாரைவார்த்தல் நிகழும். தாரை -நீர், நீண்டு ஓடுதலால் பெற்ற பெயர். தார் என்பதும் நீர் என்பதும் ஒன்றே. தார் நீண்டு செல்வது என்னும் பொருளது; நீள்வதால் ‘நீள்’ என்பது நீரே. குறள் வடிவில் வந்த திருமாலுக்கு மாவலி மன்னன் தாரை வார்த்தகதையும், குறள் நெடுமாலாக வளர்ந்து நிலமளந்த கதையும் நாடறிந்தது. வேதியச் சடங்கில் திருமணம் முடித்துத் தருதலில் தாரைவார்த்தல் உண்டு. பெண்ணை உன்னிடம் பொறுப்பாக ஒப்படைத்து விட்டேன் என்பதற்குரிய சடங்காக அது நிகழ்த்தப் படுகின்றது. நீர் தொட்டு உறுதி செய்தல், நிலந் தொட்டு உறுதிசெய்தல் போல இது நீர் விட்டு உறுதி செய்தலாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்