சொல் பொருள்
1. (வி) விழுங்கு, 2. (பெ) பனங்காய்க்குள் இருக்கும் இனிய மென்மையான சதைப்பகுதி
சொல் பொருள் விளக்கம்
விழுங்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
swallow
pulpy tender kernel of palmyra unriped fruit
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அகன் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாய் ஆக பகல் நுங்கியது போல படு_சுடர் கல் சேர – கலி 119/1,2 அகன்ற உலகத்தை வெளிச்சமாக்கும் தன் பல கதிர்களையே வாயாகக்கொண்டு பகலை விழுங்கியது போல, மறைகின்ற ஞாயிறு மலையைச் சேர, வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின் இன் சேறு இகுதரும் எயிற்றின் – சிறு 27,28 பெரிய குலையினையுடைய பனை வளர்த்த நுங்கில் உள்ள இனிய சுவைநீர் (தன் சுவையால்)தாழ்ந்துபோகும் (ஊறலையுடைய)பற்களையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்