Skip to content
நுணவம்

நுணவம் என்பது மஞ்சணத்திமரம்.

1. சொல் பொருள்

(பெ) மஞ்சணத்தி, மஞ்சள்நாறி, மஞ்சள் நீராட்டி, மஞ்சள்வண்ணா, நுணா, வெண் நுணா அல்லது நோனி மரம்; தணக்க மரம்.

2. சொல் பொருள் விளக்கம்

கருத்த அடித்தண்டையும் கிளைகளையும், நல்ல மணமும் வெண்மை நிறமும் கொண்ட பூக்களையும் கொண்டது. வண்டியிழுக்கும் மாடுகளின் கழுத்து பாரத்தைக் குறைக்க நம் முன்னோர் தேர்ந்தெடுத்த மரமிது. முற்றிய இதன் தண்டுப்பகுதி மஞ்சளாக இருப்பதால், இதற்கு மஞ்சணத்தி என்ற பெயரும் உண்டு.

உறுதியான அதேசமயம் மிகவும் லேசான மரமென்பதால் ஏர், வில்வண்டி, பாரவண்டி போன்றவற்றில் மாடுகளைப் பூட்டும் நுகத்தடி செய்ய இம்மரம் பயன்பட்டிருக்கிறது. நீர் இறைக்கும் கபிலை ஏற்றத்தில் எருதுகளின் கழுத்தில் பூட்டப்படும் நுகம் இந்த மரத்தால் செய்யப்படும். படுக்க உதவும் கட்டில் கால்கள் இம்மரத்தால் செய்யப்படும்

நுணா
நுணா

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Indian mulberry, Morinda citrifolia, Morinda tinctoria Roxb, Morinda coreia(Rubiaceae);

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

நறவு வாய் உறைக்கும் நாகு முதிர் நுணவத்து – சிறு 51

தேனை(ப் பூக்கள் தம்மிடத்திலிருந்து)துளிக்கும் இளமை முதிர்ந்த நுணா மரத்தின்

இது கரிய அடிப்பகுதியையும், பெரிய கிளைகளைகளையும், மிக்க நறுமணத்தையும் உடையது.

அவரோ வாரார் தான் வந்தன்றே
சுரும்பு களித்து ஆலும் இரும் சினை
கரும் கால் நுணவம் கமழும் பொழுதே – ஐங் 342

அவரோ வரவில்லை, ஆனால் இது வந்து நிற்கிறது –
வண்டினங்கள் களிப்புடன் பாடிக்கொண்டு சுற்றித்திரிகின்ற, பெரிய கிளைகளையும்
கரிய அடிப்பகுதியையும் கொண்ட நுணா மரங்கள் நறுமணத்தைப் பரப்புகின்ற இனிய பருவம்

இதன் பூக்கள்வெள்ளைநிறத்தில் இருக்கும்.

சிறு வெள் அருவி துவலையின் மலர்ந்த
கரும் கால் நுணவின் பெரும் சினை வான் பூ – அகம் 345/15,16
மஞ்சணத்தி
மஞ்சணத்தி
கரும் கால் நுணவம் கமழும் பொழுதே - ஐங் 342/3

கரும் கால் நுணவின் பெரும் சினை வான் பூ - அகம் 345/16

நறவு வாய் உறைக்கும் நாகு முதிர் நுணவத்து/அறை வாய் குறும் துணி அயில் உளி பொருத - சிறு 51,52

கரும் கால் மராஅ நுணாவோடு அலர - திணை50:16/1
நுணவம்
நுணவம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *