சொல் பொருள்
தேர் உருளை, திருமால் கையிலுள்ள சக்கராயுதம், ஆணைச் சக்கரம், கடல்
சொல் பொருள் விளக்கம்
தேர் உருளை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
wheel of a chariot, the discuss in the hands of Lord Vishnu, Wheel of sovereignty, sea
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடும் தேர் வன் பரல் முரம்பின் நேமி அதிர சென்றிசின் வாழியோ பனி கடு நாளே – நற் 394/4-6 கட்டப்பட்ட மணிகள் பெரிதாய் ஒலிக்கும் அணிகளால் புனையப்பட்ட நெடிய தேரில், வன்மையான பரல்கற்களைக் கொண்ட சரளைக்கல் பூமியில் சக்கரங்கள் அதிரும்படியாகச் சென்றான், வாழ்க! அந்த பனிமிக்க நாளில்; நேமியொடு வலம்புரி பொறித்த மா தாங்கு தட கை நீர் செல நிமிர்ந்த மாஅல் போல – முல் 1-3 சக்கரத்துடன் வலம்புரி(ச் சங்கின்) குறிகள் பொறிக்கப்பட்ட, திருமகளை அணைத்த பெரிய கையில் (மாவலி வார்த்த)நீர் (தன் கையில்)சென்றதாக உயர்ந்த திருமாலைப் போல, கொடிது கடிந்து கோல் திருத்தி படுவது உண்டு பகல் ஆற்றி இனிது உருண்ட சுடர் நேமி முழுது ஆண்டோர் வழி காவல – புறம் 17/5-8 தீயன போகவும் கோல் செங்கோலாகவும் உரிய இறைப்பொருளுண்டு நடுவுநிலையுடன் தம்சுடர்விளங்கும் ஆணைச் சக்கரத்தை இனிதாகச் செலுத்தவும் வல்லவராய் வாழ்ந்தோர்தம் மரபினைக் காத்தவனே! நேமி தந்த நெடு_நீர் நெய்தல் – அகம் 400/21 ஆழமான நீரையுடைய கடல் தந்த நெய்தலின் நெடுநீர் நேமி என மாறிக்கூட்டுக – நாட்டார் உரை விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்