சொல் பொருள்
சேரநாட்டிலுள்ள ஒரு மலை,
உண்மை
மக்களாட்சி முறையில் செலுத்தப்படும் வாக்குரிமை
சொல் பொருள் விளக்கம்
தெய்வத்திற்கு முன்னாக நின்று ‘உண்மை’ சொல்வதை நேரி என்பது குமரி மாவட்ட வழக்கு. நேரில் நின்று கூறுவதுடன் நேரிய நெஞ்சத்துடன் கூறுவதுமாம். நேரி என்பதற்கு மக்களாட்சி முறையில் செலுத்தப்படும் வாக்குரிமையை நேரி என்பார் பாவாணர்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a hill in the chera country
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கல் உயர் நேரி பொருநன் செல்வக்கோமான் பாடினை செலினே – பதி 67/22,23 பாறைகளால் உயர்ந்த நேரி என்னும் மலைக்கு உரியவனான, செல்வக் கோனுமாகிய வாழியாதனைப் பாடினவனாகச் சென்றால்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்