சொல் பொருள்
(பெ) படகு,
சொல் பொருள் விளக்கம்
படகு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
boat
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி நெல்லொடு வந்த வல் வாய் பஃறி பணை நிலை புரவியின் அணை முதல் பிணிக்கும் கழி சூழ் படப்பை – பட் 29-32 வெள்ளை(வெளேர் என்ற) உப்பின் விலையைச் சொல்லி(விற்று, அதற்கு மாற்றாக வாங்கிய) நெல்லைக் கொண்டுவந்த, கெட்டியான விளிம்புகளையுடைய படகுகளை கொட்டில் பந்தியில் நிறுத்தப்படும் குதிரைகளை(க் கட்டிவைப்பதை)ப் போன்று — கட்டுத்தறிகளில் கட்டிவைக்கும் உப்பங்கழி சூழ்ந்த ஊர்ப்புறங்களையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்