Skip to content

சொல் பொருள்

(வி) 1. பிளவுபடு, 2. பகிர்ந்துகொடு, பங்கிடு, 3. பிள, 4. பிரி

சொல் பொருள் விளக்கம்

1. பிளவுபடு, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be split, divided, distribute, split into parts, divide

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பகு வாய் ஞமலியொடு பைம் புதல் எருக்கி – பெரும் 112

பிளவுபட்ட வாயையுடைய நாய்களுடன் பசிய புதர்களை அடித்து

கானவன் எய்த முளவு_மான் கொழும் குறை
தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொடு
காந்தள் அம் சிறுகுடி பகுக்கும் – நற் 85/8-10

வேட்டுவன் எய்த முள்ளம்பன்றியின் கொழுத்த தசையை,
தேன் மணக்கும் கூந்தலையுடைய கொடிச்சி தான் அகழ்ந்தெடுத்த கிழங்குடன்
காந்தள் மலர்ந்துகிடக்கும் அழகிய சிறுகுடியினருக்குப் பகிர்ந்துகொடுக்கும்

மேவார் விடுத்தந்த கூந்தல் குதிரையை
வாய் பகுத்து இட்டு புடைத்த ஞான்று இன்னன்-கொல்
மாயோன் என்று உட்கிற்று என் நெஞ்சு – கலி 103/53-55

தன்னை விரும்பாத கஞ்சன் முதலானோர் கட்டவிழ்த்துவிட்ட கழுத்து மயிரினைக் கொண்ட குதிரையை
அதன் வாயைப் பிளந்திட்டு அதனைக் கையால் அடித்த சமயத்தில் இப்படிப்பட்டவனாயிருந்தானோ அந்தக்
கண்ணன் என்று கூறும்படியாக நடுங்கியது என் நெஞ்சு”;

நினக்கு யான்
உயிர் பகுத்து அன்ன மாண்பினேன் ஆகலின் – நற் 128/3,4

உனக்கு யான்
ஓருயிரை இரு உடம்புகளுக்குள் பிரித்து வைத்தாற் போன்ற சிறப்புற்றவளாதலினால்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *