சொல் பொருள்
(பெ) 1. விரோதம், பகையுணர்ச்சி, 2. பகைவன், விரோதி, எதிராளி, 3. மாறுபாடு,
சொல் பொருள் விளக்கம்
1. விரோதம், பகையுணர்ச்சி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
hostility, enmity, foe, enemy, opponent, contrast
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேந்து பகை தணிக யாண்டு பல நந்துக – ஐங் 6/2 வேந்தன் பகை தணிவானாக; அவன் வாழ்நாள் பல ஆண்டுகளுக்கு நீளுக விரி கடல் வியன் தானையொடு முருகு உறழ பகை தலைச்சென்று – மது 180,181 விரிந்து நிற்கும் கடல் போல் அகன்ற படையோடு முருகனைப் போன்று பகைவரிடத்திற்குச் சென்று நெய்தல் அம் பகை தழை பாவை புனையார் – ஐங் 187/3 நெய்தல் பூவினின்றும் மாறுபாடுடைய இந்தத் தழையுடையைத் தம் பாவைக்கும் அணியமாட்டார்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்