சொல் பொருள்
1. (பெ.அ) 1. இள மஞ்சள் நிறமான, 2. புத்தம்புதிய, 3. தூய்மைசெய்யப்படாத, 4. இளமையான
2. (பெ) பால் தரும் பெண்
தமிழ் சொல்: ஆன்(ஆவு)
சொல் பொருள் விளக்கம்
1. இள மஞ்சள் நிறமான
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
pale yellow, fresh, unpure, crude, young, cow
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செம் நீர் பசும்பொன் புனைந்த பாவை செல் சுடர் பசு வெயில் தோன்றி அன்ன – மது 410,411 சிவந்த தன்மையினையுடைய பசும்பொன்னால் செய்த பாவை வீழ்கின்ற ஞாயிற்றின் இள மஞ்சள் நிறமான மாலைவெயிலில் காட்சியளித்தது போன்ற வால் அரிசி பலி சிதறி பாகு உகுத்த பசு மெழுக்கின் காழ் ஊன்றிய கவி கிடுகின் மேல் ஊன்றிய துகில் கொடியும் – பட் 165-168 வெண்மையான அரிசியையும் பலியாகத் தூவி, சந்தனக் குழம்பினைக் கொட்டி மெழுகிய புது மெழுக்கினையுடைய, கால்கள் நட்டு (அதன் மேல்)வைத்த கவிந்த மேற்கூரையின் மேலே நட்டுவைத்த (வீர வணக்க)துகில் கொடிகளும், கைவல் கம்மியன் கவின் பெற கழாஅ மண்ணா பசு முத்து ஏய்ப்ப குவி இணர் புன்னை அரும்பிய – நற் 94/4-6 கைத்தொழிலில் வல்ல கம்மியன் அழகுபெறக் கழுவாத தூய்மைசெய்யாத சுத்தமற்ற முத்தைப் போல குவிந்த கொத்துக்களையுடைய புன்னை மரம் அரும்புவிட்டிருக்கின்ற மா கடல் நடுவண் எண் நாள் பக்கத்து பசு வெண் திங்கள் தோன்றி ஆங்கு – குறு 129/3,4 கரிய கடலின் நடுவில் எட்டாம் நாளுக்குரிய இளமையான வெள்ளிய திங்கள் தோன்றியதைப் போல் பல் பசு பெண்டிரும் பெறுகுவன் – ஐங் 271/3 பல பசுக்களையும், பெண்டிரையும் பெறக்கூடிய தகுதியையுடையவன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வடசொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்