சொல் பொருள்
பசுமை – செழிப்பு, செழுமை
சொல் பொருள் விளக்கம்
‘பசுமை’ வண்ணத்தைக் குறியாமல் அதன் செழுமையைக் குறிப்பதாக அமைகின்றது. “அந்த நிகழ்ச்சி அல்லது நினைவு பசுமையாக இருக்கிறது” என்பது இதனை விளக்கும். பசுமையான இயற்கைச் செடி கொடி மரங்கள், ஊட்டமும் கொழுமையும் மிக்கவை. அதன் வளமை பசுமையாலேயே அறியப்படும். பச்சை இலை பிடிப்போடு இருக்கும். பழுத்தது உதிரும். தோலுக்குப் பச்சை என்பதொருபொருள். அது வளமையாம் கொழுமையைச் சேர்த்து வைக்கும் இடமாக இருத்தலால் பெற்ற பெயராம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்