சொல் பொருள்
படங்காட்டல் – பகட்டுதல் நடித்தல்
சொல் பொருள் விளக்கம்
கடுமையாகக் காலமெல்லாம் உழைப்பவர் உழைக்கச் சிலர் குறித்த பொழுதில் வந்து தலைகாட்டி முன்னாக நின்று மேலலுவலர் பாராட்டைப் பெற்று விடுவதுண்டு. அத்தகையரைப் “படங் காட்டுகிற ஆளுக்குத் தான் காலம்; என்ன உழைத்து என்ன பயன்” எனப் பிறர் வெளிப்படுத்தும் ஏக்கவுரையால் பகட்டுதல், நடித்தல் பொருள் விளங்கும். படங்காட்டினால் மயங்காதவர் உண்டா? குழந்தைகள் தானா, படங் காட்ட மயங்குகின்றனர்? எவ்வளவு பெரியவர்கள், படங்காட்ட மயங்கும் குழந்தை நிலையில் உள்ளனர்!
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்