சொல் பொருள்
படபடத்தல் – கோபப்படல்
சொல் பொருள் விளக்கம்
கால் படபடத்தல், கை படபடத்தல், நாடித்துடிப்பு, சொல் முதலியன படபடத்தல் வாய் உதடு துடிதுடித்தல் இவையெல்லாம் சீற்றத்தின் குறிகள் பித்தப் படபடப்பென ஒரு நோயுண்டு. அப்படபடப்பு மயக்கத்தை உண்டாக்கி வீழ்த்துவது. அதனினும் கொடுமையானது இப்படபடப்பு. ஏனெனில் சிலர் படபடப்பு குடும்பத்தையே கெடுத்ததுண்டு. சினம் சீற்றம் வெகுளி எனப் படபடத்து, குடியையே படபடக்க வைப்பர்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்