சொல் பொருள்
1. (வி) 1. (செடி, கொடி முதலியன) கிளைத்து வளர், 2. அடை, சென்று சேர், 3. செல், ஒழுகு, 4. எண்ணு, கருது, 5. பரவு, 6. விரவிப்பரவு, மேவு, 7. விரி, அகலு
2. (பெ) 1. விரிதல், பரவுதல், 2. வருத்தம், துன்பம்
சொல் பொருள் விளக்கம்
1. (செடி, கொடி முதலியன) கிளைத்து வளர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
spread or branch out as a creeper, reach, arrive at, pass, proceed, think of, consider, spread, fan out, pervade, diffuse, be wide, spreading, expanding, sorrow, distress
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெய்தல் நீர் படர் தூம்பின் பூ கெழு துறைவன் – ஐங் 109/1,2 நெய்தலின், நீரில் படர்ந்த உள்துளையுள்ள தண்டுகளில் பூக்கள் பொருந்தியிருக்கும் துறையைச் சேர்ந்தவன் பல நாள் நில்லாது நில நாடு படர்-மின் – மலை 192 (எனவே)பல நாட்கள் நிற்காமல், (=தாமதியாமல்)(மலையை விட்டிறங்கி)சமவெளிப்பகுதியைச் சென்றடைவீர் சிறு நனி ஒரு வழி படர்க என்றோனே எந்தை – புறம் 381/21 ஒரு வழியே சிறிது பெரிது நினைந்து ஒழுகுவாயாக என்று சொன்னான் எங்கள் தலைவன். அல்லது கடிந்த அறம் புரி செங்கோல் பல் வேல் திரையன் படர்குவிர் ஆயின் – பெரும் 36,37 (நல்லது)அல்லாததை விலக்கிய அறத்தை விரும்பின செங்கோலையும், பல வேற்படையினையும் உடைய திரையனிடம் செல்ல எண்ணுவீராயின் மால் வரைச் சீறூர் மருள் பல் மாக்கள் கோள் வல் ஏற்றை ஓசை ஓர்மார் திருத்திக்கொண்ட அம்பினர் நோன் சிலை எருத்தத்து இரீஇ இடம்-தொறும் படர்தலின் – அகம் 171/9-12 பெரிய மலையடிவாரத்திலுள்ள சிறிய ஊரில் மருண்ட மக்களாய பலர் கொல்லுதல் வல்ல கரடி ஏற்றின் ஒலியினை உணர்வதற்காக செப்பம் செய்துகொண்ட அம்பினராய், வலிய வில்லை தோளில் கொண்டு இடமெல்லாம் பரவிவருதலினால் சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம்வயின் படர்ந்த உள்ளம் பழுது அன்று ஆக – அகம் 68/12,13 விளங்கும் ஒளியையுடைய வளை கழன்றிடும் நம்மிடத்து மேவிய தமது உள்ளம் குற்றமற்றதாக பெயர் பயம் படர தோன்று குயில் எழுத்து – அகம் 297/8 பெயரும் புகழும் விரியத் தோன்றுமாறு பொறித்த எழுத்துக்களை வெயில் கதிர் மழுங்கிய படர் கூர் ஞாயிற்று – மது 431 வெயிலையுடைய சுடர்கள் (வெப்பம்)குறைந்த, விரிந்து பரவுதல் மிக்க ஞாயிற்றையுடைய உள் கரந்து உறையும் உய்யா அரும் படர் – குறி 11 (தன்)மனத்துள்ளே மறைந்து உறைந்து கிடக்கும் (ஆற்றுதற்கு)அரிய துன்பத்தை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்