சொல் பொருள்
(பெ) பகைவலி
சொல் பொருள் விளக்கம்
பகைவலி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
valiant hatred
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின் படிமதம் சாம்ப ஒதுங்கி – பரி 4/16-18 உன்னுடன் நன்றாக நட்புப்பாராட்டிய பிரகலாதனின் நல்ல மார்பினைத் தழுவி, உன்னிடம் ஒன்றாத உறவுகொண்ட இரணியனுடைய பெரிய மலை போன்ற மார்பின்கண் பகைவலி அழியும்படியாக அவன்மேல் பாய்ந்து பாம்பு படிமதம் சாய்த்தோய் பசும் பூணவை கொடி மேல் இருந்தவன் தாக்கு இரையது பாம்பு – பரி 4/47,48 பாம்பின் பகையின் செருக்கை அழித்தவனே! பொன் அணிகலன் அணிந்த உன் கொடியில் இருக்கும் கருடன் தாக்குகின்ற இரையும் பாம்பே! படிமதம் – பகைவலி – படிபிரதி என்பதன் சிதைவு – பொ.வே.சோ.உரை விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்