சொல் பொருள்
படியளத்தல் – உதவுதல்
சொல் பொருள் விளக்கம்
கூலிவேலை செய்வார் வேலைமுடிந்ததும் வீட்டுக்குப் போகும் போது படியால் அளந்து கூலி வாங்கிக்கொண்டு போவது வழக்கம். அற்றை உணவுக்கு அத் தவசம் உதவியாதலால் உழைப்புக்கு உரிய கூலியே என்னும் கொடைபோலக் கருதுவாராயினர். அதனால் படியளத்தல் இறைவன் கொடை போலக் கொண்டனர். திட்டிக் கொண்டு கொடுத்தாலும் படியளக்கிற நாயன் திட்டினால் திட்டி விட்டுப் போகிறான்; திட்டென்ன அடிக்கவா செய்கிறது” என்பது படியின் இன்றியமையாமையைத் தெரிவிப்பதுடன், வறுமை சிந்திப்பதையும் கெடுத்துவிட்ட கொடுமையையும் அறியலாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்