சொல் பொருள்
(பெ) 1. தவம், நோன்பு, விரதம், 2. வழிபடு தெய்வம்
சொல் பொருள் விளக்கம்
1. தவம், நோன்பு, விரதம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
penance, austerities, tutelary deity
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கல் தோய்த்து உடுத்த படிவ பார்ப்பான் – முல் 37 (ஆடையைக்)காவிக்கல்லைத் தோய்த்து உடுத்திய, விரதங்களையுடைய அந்தணன் பைம்_சேறு மெழுகிய படிவ நன் நகர் – பெரும் 298 பசிய சாணக் கரைசலால் மெழுகிய வழிபடும் தெய்வங்களையுடைய நன்றாகிய அகங்களையும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்