சொல் பொருள்
பட்டணம் – நாகரிகம்
சொல் பொருள் விளக்கம்
பட்டணம், பெருநகர். ஆங்கு ஆள்வோர்; செல்வர், கற்றோர் ஆகியோர் வாழ்ந்தமையாலும், அவர்கள் வளமான வாழ்வும், பொழுதுபோக்கும், கலைத்திறமும் சிறக்க வாய்ப்புகளை அமைத்துக் கொண்டமையாலும் பட்டணம் என்பது நாகரிகக் களமாக மதிப்புப் பெற்றது. பட்டணத்தான் உடைநலத்தோடும், பூச்சுப் புனைவுகளோடும், பட்டிக்காட்டார் புரியாத மொழியோடும் சென்ற போது அவர்களைக் கண்ட சிற்றூரார் பெருத்த நாகரிக முடையவரெனவும், வேறோர் உலகத்தில் இருந்து வந்தவர் எனவும் அறியாமையால் மதிப்பாராயினர். அதனால் பட்டணம் நாகரிகம் எனப்பட்டது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்