Skip to content

சொல் பொருள்

(பெ) 1. கடற்கரை நகரம். 2. எயிற்பட்டினம் 3. புகார் எனப்படும் காவிரிப்பூம்பட்டினம்

சொல் பொருள் விளக்கம்

1. கடற்கரை நகரம்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a city on the seashore, an ancient port city near Puduchery, an ancient port city in the Chozha Country

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தாம் வேண்டும் பட்டினம் எய்தி கரை சேரும்
ஏமுறு நாவாய் வரவு எதிர்கொள்வார் போல் – பரி 10/38,39

தாம் நினைக்கும் பட்டினத்தை நோக்கி வந்து கரை சேர்கின்ற இன்பமான நாவாயின் வரவை எதிர்கொள்ளும் வணிகர் போல,

மணி நீர் வைப்பு மதிலொடு பெயரிய
பனி நீர் படுவின் பட்டினம் படரின் – சிறு 152,153

(நீல)மணி (போலும்)கழி (சூழ்ந்த)ஊர்களையுடையதும், மதிலின் பெயர்கொண்ட, குளிர்ந்த நீர் மிக்க குளங்களையுடைத்தாகிய, (எயில்)பட்டினத்தே செல்வீராயின்

முட்டா சிறப்பின் பட்டினம் பெறினும்
வார் இரும் கூந்தல் வயங்கிழை ஒழிய
வாரேன் வாழிய நெஞ்சே – பட் 218-220

குறைவுபடாத சிறப்புகள் கொண்ட – பட்டினம் (எனக்கு உரித்தாகப்)பெறுவதாயினும் – நீண்ட கரிய கூந்தலையுடைய ஒளிரும் அணிகளையுடையாள் (இங்கு என்னைப்)பிரிந்திருப்ப, (யான் நின்னோடு கூட)வாரேன்; (நீ)வாழ்க, நெஞ்சே

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *