சொல் பொருள்
பட்டை தீட்டல் – ஏமாற்றுதல், ஒளியூட்டல்
சொல் பொருள் விளக்கம்
“அவனை நம்பினை; அவன் நன்றாகப் பட்டை தீட்டி விட்டான்” என்பது ஏமாற்றிவிட்டான் என்னும் பொருளில் வழங்குவதாம். “பட்டை நாமம் பரக்கச் சார்த்தல்; கொட்டை நாமம் குழைச்சிச்சார்த்தல்” என்னும் பழமொழியும் ஏமாற்றை விளக்குவதாம். வயிரத்திற்குப் பட்டை தீட்டல் ஒளியூட்டுவதாம். சிலர் நல்ல ஆசிரியரை அல்லது பெருமக்களை அடுத்து அறிவன அறிந்து கொண்டால் அவரைப் பட்டை தீட்டப்பட்ட ஆள் எனப்பாராட்டல் உண்டு. இப்பட்டை ஒளியுடைமையாம். அறிவுடைமையைச் சுட்டுவதாம்
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்