சொல் பொருள்
பட்டை போடல் – மதுக் குடித்தல்
சொல் பொருள் விளக்கம்
பட்டை பதனீர் பருகும் குடையாகும். பட்டை கட்டல் பார்க்க. ஆனால் அப்பதனீர் பருகுதலைக் குறியாமல், அப்பட்டையில் குடிக்கும் கட்குடியைக் குறித்து வழங்குவதாயிற்று. இனிப் பட்டைபோட்டுக் காய்ச்சும் சாராயம் பட்டை எனப்படுவதால் அதனைக் குடித்தலையும், குறிக்கும். ‘போடல்’ என்பது உட்கொளல் பொருளது. ‘வெற்றிலை போடல்’ ‘வாயில் போடல்’ என்பவற்றால் அப்பொருள் விளங்கும்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்